Tuesday 21 December 2010

** இப்படியும் நடக்கிறது இங்கிலாந்தில் …

நிலா காயுது நேரம் நல்ல நேரம்…உண்மைச் சம்பவம் சிறுகதையாக…

அது ஒரு சாம்பலான மதிய நேரம்..

ஒரு புலம் பெயர் தமிழர் நடந்து போகிறார்.. வேறெங்கே வங்கியை நோக்கித்தான். பின்புறத் தலையில் முடி கொட்டி நிலாக்காய்கிறது..

அதையே கூர்ந்து பார்க்கிறாள் வெள்ளைக்கார திருடி ஒருத்தி… நேரம் நல்ல நேரமென அவள் வாய் முணுமுணுக்கிறது..

நான்கு புறமும் தலையைச் சுழற்றி ஒளி வீசிவிட்டு, வங்கியில் பணமெடுக்கும் தானியங்கியில் வீஸா அட்டையை திணிக்கிறார் தமிழர்..

அவர் தலைக்குள் திணித்து வைத்திருக்கும் பணப்பிரச்சனைகளை சுமக்க முடியாத வலியோடு வீஸா அட்டை கொடிகாமத் தேங்காய் சுமந்த தட்டி வான்போல தள்ளாடியபடி உள்ளே நுழைகிறது..

கீக்.. கீக்… கீக்… கீக்… தனது வங்கி அட்டையின் நான்கு இரகசிய எண்களை அழுத்துகிறார்..

இனி தானயங்கி இயந்திரம் எவ்வளவு பணம் வேண்டுமெனக் கேட்கப்போகிறது..

இதுதான் தருணம்..

மின்னல் வேகத்தில் பாயந்து வருகிறாள் திருடி..

சடசடவென தமிழரிடம் ஆங்கிலத்தில் ஏதோ கூறி, தானியங்கி இயந்திரத்தில் பிழை இருக்கிறது உடனடியாக வங்கிக்குள் சென்று யாரோ ஒருத்தியை அழைத்துவா.. எனது வங்கி அட்டையும் உள்ளே போய்விட்டது என்று கூறி அவரை விரட்டுகிறாள்..

தமிழர் அவளைப் பார்த்துச் சிரிக்கிறார்..

அடடா எவ்வளவு அக்கறை… தங்க மலரே உள்ளமே தழுவி ஓடும் வெள்ளமே…

மற்றத் தமிழர்கள் ஏதாவது கேட்டால் சிங்கமாகச் சீறி அறுபத்து நான்கு கேள்விகளைக் கேட்கும் அந்தத் தமிழர் திருட்டு வெள்ளைக்காரியிடம் எதையுமே கேட்காது வங்கிக்குள் ஓடுகிறார்…

அவ்வளவுதான்… 300 பவுண்சை அடித்து எடுத்துக் கொண்டு வங்கி அட்டையுடன் பெண்மணி மாயமாகிவிட்டாள்..

நீயுமா… வங்கி ஊழியர்கள் சிரித்தார்கள்…

தலையை மூடியபடி பணத்தைத் திருடிய அந்த ருமேனிய பெண்மணியை வங்கி ஊழியர்கள் அறிந்திருந்தனர்… ஆனால் கமேராவில் அவளுடைய முகம் இதுவரை பதிவாகவில்லை…காத்திருந்தார்கள்..

ஆனாலும் என்ன.. தமிழர் தலையில் 300 பவுண்ஸ் துண்டு விழுந்தது விழுந்ததுதான்..

சம்பவம் இரண்டு…

இன்னொரு நாள் அதே தமிழர் மரக்கறிக் கடையொன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்..

கோட் சூட்போட்டு டை அணிந்து சன் கிளாஸ் மினுமினுக்க டிப் டாப்பாக ஒரு வெள்ளையன் வந்தான்..

இவருடைய தலையை அவனும் பார்த்தானோ என்னவோ நிலாக்காயுதே நேரம் நல்ல நேரம்…

காருக்குள் சாவியை வைத்து கதவை மூடிவிட்டதாகவும், அடுத்த சாவி வீட்டில் இருப்பதாகவும் கூறிய அவன் பத்து பவுண்ஸ்கள் கொடுத்தால் உடனடியாக பஸ்சில் ஏறி வீடு போய் சாவியை எடுத்து வந்துவிடுவேன் அத்தோடு தங்கள் பத்து பவுண்சையும் கொடுத்து விடுவேன் என்றான்..

தமிழருக்கு நம்பிக்கை கொடுக்க தன்னுடைய கைத்தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்தான்..

அவ்வளவு போதும் அவனிடம் பத்துப் பவுண்ஸ்களை கொடுத்து அனுப்பினார்..

தமிழர்களின் குழைவும் சிரிப்பும் தனக்கு மிக விருப்பம் என்று கூறினான் அவன்..

அவ்வளவுடன் நின்றானா..

இஸ்ரேலியருக்கு அடுத்தபடியாக ஈழத்தமிழரே உலகில் அறிவாளிகள் என்ற இரகசியத்தையும் ஓர் ஊது ஊதினான்..

தமிழரின் தோள்கள் தினவெடுத்தன.. வாளும் வேலும் இரத்த ருசி பார்க்கத் துடிதுடித்தன.. சிறகிருந்தால் புதுமாத்தளனுக்கே போய் புதிதாகப் போரை ஆரம்பித்திருக்கக் கூடிய ரென்சன் உலுப்பியது..

கடும் ரென்சன் சிறிது நேரத்தில் பசியைக் கிளப்பியது..

காலைச் சாப்பாடு சாப்பிடாமல் மிச்சம் பிடித்து, மத்தியானச் சாப்பாட்டுக்குக் கொண்டுவந்த பத்துப் பவுண்ஸ் போய்விட்டது அது வர சாப்பிடலாமெனக் காத்திருந்தார்..

நேரம் ஆக.. ஆக.. பசி வயிற்றைக் குடைந்தது..
அவன்; வரவில்லை..

அவன் கொடுத்துப்போன தொலைபேசி இலக்கத்தை அழுத்தினார்

அப்படியொரு இலக்கமே இல்லை என்பதை அறிந்து கொண்டபோதுதான் அவருக்கு தலை சுற்றியது..

எல்லாக் கடைகளிலும் பத்துப்பத்து பவுண்சாக கறந்து கொண்டு போய்விட்ட அந்த ருமேனியனின் முகம் அவருடைய கண்களில் மின்னியது..

அட இஸ்ரேலியனும் இப்படித்தானா என்ற கேள்வியும் சாக்குத் தைக்கும் ஊசிபோல அவரை கத்தியது..

பத்துப்பவுண்ஸ் அம்போ…

சம்பவம் மூன்று..

இப்படியாக இரண்டு தடவைகள் ஏமார்ந்து 310 பவுண்ஸ்களை கோட்டைவிட்ட அவர் இனியாவது ஊஜாராக இருக்க வேண்டுமென எண்ணியபடி காரில் போய்க் கொண்டிருந்தார்..

அதே கண்கள்.. அதே முகம்….

அவளேதான்…

கூர்ந்து பார்த்தார் வங்கியில் 300 பவுண்ஸ்சை சூறையாடிய திருட்டுக்கிறுக்கிதான் அவள்..

மடக்கிப் பிடிக்கலாமா என்று பார்த்தார்… பக்கத்தில் ஒரு டிப் டாப் ஆண்…
யார் அவன்.. அவனையும் கூர்ந்து பார்த்தார்…

சந்தேகமே இல்லை.. பத்துப்பவுணஸ் திருடிய பேர்வழிதான் அவன்..
கணவன் – மனைவியாக கைகோர்த்துப் போகிறார்கள்…

இருவரையும் ஒன்றாக மடக்கி தமிழன் வீரத்தைக் காட்டிவிட முடிவு செய்தார்.. காரை அப்படியே ஓரமாக ஒதுக்கினார்..

காரை விட்டுவிட்டுப்போனால் பாக்கிங் தண்டம் கட்ட வேண்டி வரும்.. அதனால் ஸ்ராட்டிலேயே நிறுத்தி விளக்குகளை இரண்டு பக்கங்களிலும் மின்னலடிக்க விட்டபடியே.. எகிறிப்பாய்ந்து ஓடினார்…

வழிவிடு வழிவிடு வீதிக்கு வந்துவிட்டான் வீரபாண்டிய கட்ட பொம்மன்…
ஓடாத வேகத்தில் பிடரி சிலிர்க்க ஓடினார்…

நிலாக்காயுது நேரம் நல்ல நேரம்…

அவருடைய பின்புற வெண் மண்டையை அவள் பார்த்துவிட்டாள்… இருவரும் அருகில் இருந்த ஓடைக்குள் புகுந்து மறைந்துவிட்டார்கள்…

நாலு மாத்திரை போட்டாலும் அடங்க முடியாத இரத்தக் கொதிப்புடன் திசை திக்கின்றித் தேடி ஓடினார்… பத்து நிமிடங்கள் கரைந்தன..

ஓடி மறைந்துவிட்டார்கள் இருவரும்..
இப்போதுதான் காரை ஸ்ராட்டிலேயே விடடிருப்பது நினைவுக்கு வந்தது..
காரை எடுக்க வேகமாக ஓடினார்…

காண்பது கனவா நிஜமா… கண்களை அழுத்தித் துடைத்தார்… தலையைச் சுற்றி மின்னல்கள் சுழன்றன..

என்ன ஆச்சரியம் அங்கே காரைக் காணவில்லை..
காரையும் சுட்டுட்டான்ரா….

தமிழருக்கு தலை மறுபடியும் சுற்ற ஆரம்பித்தது..
வீதியோரமாக அப்படியே உட்கார்ந்துவிட்டார்…

காரைத் திருடியது யார் ? அவனும் அவளுமா.. இல்லை வேறு யாருமா ? நிலத்தில் இருந்தபடியே அலப்பாரித்தார்..

அதோ வீதியில் சிகப்பு நிற ரொயோற்றா கார் ஒன்று போகிறது..
தன்னுடையதா என்று பார்க்க துடித்து எழுந்து ஒடுகிறார்…
ஓடினார் ஓடினார் ஓடிக்கொண்டே போனார்…

Monday 1 November 2010

** மெகா ஸ்டார் மேர்வின் சில்வா

  
Mega Star marvin


  
Swarnavahini Mega Star grand Final 

Friday 8 October 2010

**எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!- - விமர்சனம் அல்ல...

ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''

படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!

ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...

வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?


நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?


ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.


சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.

இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!

நன்றி மனிதம்

Sunday 28 March 2010

**பாடகர் எகொன் மாலைதீவில்?

அமெரிக்கப்பாடகர் எகொன் இலங்கைக்கு வருவது தடைசெய்யப்பட்டுள்ளதால்,அவரது இசை நிகழ்ச்சி மாலை தீவுக்கு மாற்றப்படும் என எதிர்பார்ர்க்கப்படுகிறது.

இதற்கான பேச்சுவார்த்தைகளை ஏற்பாட்டாளர்கள் ஏற்கனவே மேற்கொண்டுள்ளதாக டெயிலிமிரர் இணையதளத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுளதாகவும் கூறப்படுகின்றது.

பௌத்த மததை அவமதித்தார் எனக்கூறி பாடகர் எகொனுடைய இலங்கைக்கான விஸா மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Thursday 25 March 2010

** ரூ.5 கோடி திமிங்கல கழிவு கடலூர் மீனவர்களிடம் சிக்கியது

கடலூர் அருகே நடுக்கடலில் ரூ.5 கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் கழிவு மீனவர்களின் வலையில் சிக்கியது.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுக்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வேலு.

இவர் நேற்று முன்தினம் அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன், வீரப்பன், நாகலிங்கம், அஞ்சப்பன், ரஜினி, நாகராஜ் ஆகியோருடன் மீன் பிடிக்க படகில் கடலுக்கு சென்றார்.

அவர்கள் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் சென்று கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது தண்ணீரில் ஏதோ ஒரு பொருள் ஒளி வீசியபடி மிதந்தது.

இதை பார்த்த அவர்கள் அதனை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். அதைத் தொடர்ந்து அந்த பொருள் குறித்து ஊர் தலைவர் கண்ணனிடம் தெரிவித்தனர். அவர் போலீசுக்கு தகவல் தந்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, அந்த பொருளை கைப்பற்றினர்.

இது பற்றி அறிந்ததும் பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின உயராய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் அருளழகன், சரவணக்குமார், முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அதனை பார்வையிட்டனர்.

அப்போது மீனவர்கள் நடுக்கடலில் இருந்து எடுத்து வந்தது திமிங்கலத்தின் கழிவு (ஆம்பர் கிரீஸ்) என்று தெரிந்தது.

திமிங்கலத்தின் இந்த கழிவை வைரத்தை பளபளப்பாக்குவதற்கு பயன்படுத்தப் படுவதாகவும், அதில் மிகுந்த மருத்துவ குணங்கள் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த திமிங்கல கழிவு ரூ.5 கோடி முதல் ரூ.6 கோடி வரை விலைபோகும் என்றும் கூறப்படுகிறது.

Wednesday 24 March 2010

**25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம்



பின் வரும் செய்தியைப் படித்துவிட்டு ஏப்ரல் ஃபூல் சமாச்சாரமோ என்று நினைத்து விட வேண்டாம். நிஜமான சினிமா மேட்டர்தான்!.

சினிமா வரலாற்றில் முதல்முறையாக 25 வேடங்களில் நடிக்கிறார் வைகைப் புயல் வடிவேலு!

பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்துக்கு 'உலகம்' என்று பெயரிட்டுள்ளனர். ஆதம் பவா என்பவர் இயக்கும் இந்தப் படம் வடிவேலுவின் திரைவாழ்க்கையின் முக்கிய மைல்கல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக மொத்தம் 175 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமான இதில் 10 கதாநாயகிகள் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்கிறார்களாம்.

ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் உதவியுடன் வடிவேலு விதவிதமான கெட்டப்புகளில் தோன்றவிருக்கிறார் இந்தப் படத்தில். அதில் ஒரு கெட்டப் நித்யானந்தா வேடம் என்றால் இப்போதே சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறதல்லவா (அந்த கெட்டப்புக்கு மட்டும் நிஜ ரஞ்சிதாவையே ஜோடியாக்குவார்களோ!!).

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இந்தப் படம் தயாராகுமாம். 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஷூட்டிங்காம்.

மேலும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இந்தப் படத்தை இடம் பெறச் செய்யவும் முயற்சிகள் நடக்கிறதாம்.

Friday 19 March 2010

**சுருட்டல் மன்னன் கருணாநிதி

கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.



ஐயா கலைஞர் அவர்களே…

இதோ உங்கள் சொத்து..பட்டியல்..எங்களுக்கு தெரிந்த வரை தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.

*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை. இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதியின்

பக்கம் 81,82 ல்…………..

*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.

இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்…………….

* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.

பக்கம் 92,93 ல்…………………………

* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.

இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு

2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்

3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு

4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)

5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்

6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்

7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்

8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்

9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு

10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி

11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்

12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)

13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)

14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)

15. தயாநிதி மாறன் வீடு

16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை

17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு

18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்

19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை

20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்

21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை

22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்

23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32
கிரவுண்ட் நிலம்

25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர்
காலணி

26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக

27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது

28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை

29. அந்தமான் தீவின் நிலங்கள்

30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்

31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு

32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை

33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்

34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது

35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு

36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர்
தோட்டங்கள்

37. செல்வம் வீடு

38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்


39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.

40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள்,
மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்

41. செல்வம் வீடு-பெங்களுர்

42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்

43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை

44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை
பீட்டர்ஸ் சாலை.

45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்

46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.

47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்

48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை,
திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.


இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.

திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம்