Thursday 25 March 2010

** ரூ.5 கோடி திமிங்கல கழிவு கடலூர் மீனவர்களிடம் சிக்கியது

கடலூர் அருகே நடுக்கடலில் ரூ.5 கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் கழிவு மீனவர்களின் வலையில் சிக்கியது.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுக்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வேலு.

இவர் நேற்று முன்தினம் அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன், வீரப்பன், நாகலிங்கம், அஞ்சப்பன், ரஜினி, நாகராஜ் ஆகியோருடன் மீன் பிடிக்க படகில் கடலுக்கு சென்றார்.

அவர்கள் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் சென்று கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது தண்ணீரில் ஏதோ ஒரு பொருள் ஒளி வீசியபடி மிதந்தது.

இதை பார்த்த அவர்கள் அதனை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். அதைத் தொடர்ந்து அந்த பொருள் குறித்து ஊர் தலைவர் கண்ணனிடம் தெரிவித்தனர். அவர் போலீசுக்கு தகவல் தந்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, அந்த பொருளை கைப்பற்றினர்.

இது பற்றி அறிந்ததும் பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின உயராய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் அருளழகன், சரவணக்குமார், முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அதனை பார்வையிட்டனர்.

அப்போது மீனவர்கள் நடுக்கடலில் இருந்து எடுத்து வந்தது திமிங்கலத்தின் கழிவு (ஆம்பர் கிரீஸ்) என்று தெரிந்தது.

திமிங்கலத்தின் இந்த கழிவை வைரத்தை பளபளப்பாக்குவதற்கு பயன்படுத்தப் படுவதாகவும், அதில் மிகுந்த மருத்துவ குணங்கள் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த திமிங்கல கழிவு ரூ.5 கோடி முதல் ரூ.6 கோடி வரை விலைபோகும் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment